Wednesday, January 24, 2007
சத்ய சாய் குடிநீர்த் திட்டம் - அனந்தபூர் மாவட்டம்
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ஒரு வறண்ட பிரதேசம். நம் இராமநாதபுரம் மாவட்டம் போல். அந்த மாவட்டத்தில் இப்போது சத்யசாயிபாபாவின் கருணையினால் பல்லாயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்கிறது. அதன் வரலாறு அறிய இந்த ஒலி ஒளிப் படத்தைப் பாருங்கள்.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் சாயி பக்தர்கள்
புட்டபர்த்தியிலும் பெங்களூருவிலும் அனந்தபூரிலும் இன்னும் மற்ற இடங்களிலும் இருக்கும் சத்ய சாயி கல்லூரிகள் கல்வி முறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு நல்ல முன்னுதாரணங்களாக இருக்கின்றன. சத்ய சாயி கல்வி நிலையங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் கட்டப்பட்டு நல்ல முறையில் ஏழை எளியவர்களுக்கு இலவசக் கல்வியை தரமானக் கல்வியை வழங்கிக் கொண்டிருக்கின்றன. அமீரகம் முதற்கொண்டு பல நாடுகளிலும் சத்ய சாயி கல்வி முறையின் அடிப்படையில் இருக்கும் கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஒலி ஒளிப் படத்தில் சத்ய சாயி கல்லூரியின் மாணவர்கள் சுவாமியின் போதனைகளை எப்படி செயல்படுத்துகிறார்கள் என்பதைக் காட்டுகிறார்கள். ஒரு பானைச் சோற்றுக்கு இந்த ஒரு சோறு பதம்.
Monday, January 22, 2007
ஸ்ரீ சத்ய சாயியின் கோடைப் பயணம்
2003ம் வருடம் மே மாதம் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா இந்தியன் ஏர்லைன்ஸில் கோடைக்கானலுக்குச் செல்லும் போது எடுக்கப்பட்ட படம்.
நன்றி: திரு. பாம்பே ஸ்ரீநிவாசன்
நன்றி: திரு. பாம்பே ஸ்ரீநிவாசன்
வணக்கம்
அன்பு தமிழ்மக்களே. அன்பு சாயிபக்தர்களே. இறைவனின் அவதாரம் என பல்லாயிரக்கணக்கான உலக மக்களால் வணங்கப்படும் சத்ய சாயி பாபாவைப் பற்றிய ஒலி ஒளிப் படங்களை இந்தே பதிக்க விரும்புகிறேன். சாயிபக்தர்களும் மற்றவர்களும் வந்து படித்தும் பார்த்தும் தங்கள் கருத்துகளைச் சொல்லியும் இறையருள் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் ஆதரவை எதிர்நோக்கி சுவாமியின் மலர்ப்பாதங்களை வணங்கித் தொடங்குகிறேன்.
அன்பன்,
ஒரு சாயிபக்தன்
அன்பன்,
ஒரு சாயிபக்தன்
Subscribe to:
Posts (Atom)