இந்தக் கால இளைஞர்களில் பாக்கியம் செய்த சிலர் எவ்வாறு இறைவனால் வழிநடத்தப்படுகிறார்கள் என்பதை இந்தப் படம் மிக நன்றாகக் காட்டுகிறது. ஒரு சூப்பர் பாடலைப் பிண்ணனியில் வைத்து மிக நன்றாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். நீங்களே பாருங்கள்.
இந்த வீடியோவைப் பற்றி நான் ஒன்றும் சொல்லி அது சொல்லும் செய்தியின் வீச்சைக் குறைக்க விரும்பவில்லை. நீங்களே பார்த்து உங்களுக்குத் தோன்றுவதை எடுத்துக் கொள்ளுங்கள். சாய்ராம்.
இறைவன் எல்லா உருவங்களிலும் இருக்கிறான் என்பதை மிக சிறப்பான ஒரு வீடியோ படத்தின் மூலம் இங்கே காட்டியிருக்கிறார்கள். சாயிபாபா இறைவன் என்று நம்பாதவர்களும் இந்த வீடியோ சொல்லும் கருத்தை தங்கள் நம்பும் இறைவனுக்கு ஏற்றிப் பார்க்கலாம். திறந்த மனத்துடன் இந்த வீடியோவைப் பாருங்கள்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ஒரு வறண்ட பிரதேசம். நம் இராமநாதபுரம் மாவட்டம் போல். அந்த மாவட்டத்தில் இப்போது சத்யசாயிபாபாவின் கருணையினால் பல்லாயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்கிறது. அதன் வரலாறு அறிய இந்த ஒலி ஒளிப் படத்தைப் பாருங்கள்.
புட்டபர்த்தியிலும் பெங்களூருவிலும் அனந்தபூரிலும் இன்னும் மற்ற இடங்களிலும் இருக்கும் சத்ய சாயி கல்லூரிகள் கல்வி முறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு நல்ல முன்னுதாரணங்களாக இருக்கின்றன. சத்ய சாயி கல்வி நிலையங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் கட்டப்பட்டு நல்ல முறையில் ஏழை எளியவர்களுக்கு இலவசக் கல்வியை தரமானக் கல்வியை வழங்கிக் கொண்டிருக்கின்றன. அமீரகம் முதற்கொண்டு பல நாடுகளிலும் சத்ய சாயி கல்வி முறையின் அடிப்படையில் இருக்கும் கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஒலி ஒளிப் படத்தில் சத்ய சாயி கல்லூரியின் மாணவர்கள் சுவாமியின் போதனைகளை எப்படி செயல்படுத்துகிறார்கள் என்பதைக் காட்டுகிறார்கள். ஒரு பானைச் சோற்றுக்கு இந்த ஒரு சோறு பதம்.
அன்பு தமிழ்மக்களே. அன்பு சாயிபக்தர்களே. இறைவனின் அவதாரம் என பல்லாயிரக்கணக்கான உலக மக்களால் வணங்கப்படும் சத்ய சாயி பாபாவைப் பற்றிய ஒலி ஒளிப் படங்களை இந்தே பதிக்க விரும்புகிறேன். சாயிபக்தர்களும் மற்றவர்களும் வந்து படித்தும் பார்த்தும் தங்கள் கருத்துகளைச் சொல்லியும் இறையருள் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் ஆதரவை எதிர்நோக்கி சுவாமியின் மலர்ப்பாதங்களை வணங்கித் தொடங்குகிறேன்.