
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ஒரு வறண்ட பிரதேசம். நம் இராமநாதபுரம் மாவட்டம் போல். அந்த மாவட்டத்தில் இப்போது சத்யசாயிபாபாவின் கருணையினால் பல்லாயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்கிறது. அதன் வரலாறு அறிய இந்த ஒலி ஒளிப் படத்தைப் பாருங்கள்.
6 comments:
அதே அனானிதான் கேட்கிறேன்...
சாயிபாபா மந்திரத்தில் மாங்கய் வரவழைக்கிறார் என்பதை நீங்கள் நம்புவதாக சொன்னீர்கள்...
இப்போது சொல்லுங்கள்..அவர் ஏன் இந்தியாவின் கடனை அடைக்க மொத்தமாக கிலோகணக்கில் தங்கத்தை வரவழைக்க கூடாது ?
கோலார் மாவட்டத்தில் பத்தாயிரம் குடும்பங்கள் இன்றைக்கு அனாதையக நடுத்தெடுவில் நிற்கிறதே ? ஏன் என்று தெரியுமா உங்களுக்கு ? அங்கே உள்ள சுரங்கம் தங்கமின்றி வற்றிவிட்டது..
அவர் தனக்கு டொனேஷனாக வரும் பணத்தில் நல்ல விஷயம் செய்கிறார் என்பது 100 சதவீதம் உண்மை..
அதே அளவு உண்மை, அவரிடம் மந்திர சக்தியும் கிடையாது, ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது என்பது..
இங்கே சொடுக்குங்கள்
இனிமேலும் சாயிபாபா மந்திரம் செய்கிறார் என்று சாதிக்கப்போகிறீர்களா ?
நீங்கள் படித்தவர் தானே ? உலோகம் என்பது எப்படி உருவாகும் அது எத்தனை அனுக்களை கொண்டிருக்கும், அதன் கொதி நிலை என்ன, தனிம வரிசை அட்டவணை என்றால் என்ன என்றெல்லாம் உமக்கு தெரியும் தானே ?
யார் எதை சொன்னாலும் கண்மூடித்தனமாக நம்புவீரா ?
குருகுலத்தில் பூனையை கட்டிவைத்த கதை தெரியுமா உமக்கு ?
உங்கள் முன்னோர்கள் கடவுளை வழிபட்டார்கள், சாயிபாபாவை நீர் எதேச்சையாக வழிபட்டீர், உமக்கு நல்லது நடந்தது, இது எல்லாம், காக்கை உட்கார பணம்பழம் விழுந்த கதைதான்.
தயவு செய்து பதில் சொல்லுங்கள். மேலும் என்னுடைய பின்னூட்டம் உங்கள் முந்தைய பதிவில் பெருந்தன்மையோடு வெளியிட்டு பதிலும் கூறிய உமது பரந்துபட்ட மனப்பான்மைக்கு தலைவனங்குகிறேன்.
சாய்ராம்!
கேள்விகள் கேட்ட அதே அனானி.
உங்கள் கேள்விகளும் நீங்கள் சுட்டி தந்துள்ள பதிவில் இருக்கும் இடுகைகளில் இருக்கும் விஷயங்களும் பல முறை பல இடங்களில் பற்பலரால் பேசப்பட்டவை. அதனால் அவற்றை வெளியிட்டு என் கருத்துகளைக் கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. இதில் பெருந்தன்மையும் இல்லை. உங்கள் பின்னூட்டம் என்னையோ வேறு எவரையோ தேவையின்றித் திட்டுவதாக இருந்தால் அதனை வெளியிடாமல் இருக்கலாம்.
சாயிபாபா மந்திரத்தில் மாங்காயை வரவழைக்கிறார் என்றெல்லாம் நம்பவில்லை. எல்லா உலகங்களையும் படைத்த இறைவன் அந்த உலகங்களையும் உயிர்களையும் எந்த சக்தியால் படைத்தானோ அந்த சக்தியினாலேயே இறைவனான சாயிபாபா இந்த 'அற்புதங்கள்' என்று எம்மைப் போன்ற சாதாரண மக்களால் சொல்லப்படும் செய்கைகளைச் செய்கிறார். அந்த சக்தி இறைவனின் இயற்கையான சக்தி. அது நமக்கு வேண்டுமானாலும் மந்திரமாகவோ அதிசயங்களாகவோ இருக்கலாம். ஆனால் இறைவனுக்கு அவை எல்லாம் இயற்கை.
இறைவனின் அவதாரங்கள் நிகழ்வது மக்களின் தீய குணங்களை மாற்றி நற்குணங்களை வளர்ப்பதற்காகவே. அப்படி இந்தியர்கள் எல்லோரும் நற்குணங்கள் கொண்டவர்கள் ஆகிவிட்டால் தானாகவே நம் நாடு முன்னேறிவிடும். தீமை இல்லாத இடங்களில் இறைவன் அருளும் செல்வமும் நிறைந்து இருக்கும். அதனை விட்டு இறைவன் ஒரே நொடிகள் ஆயிரக்கணக்கான கிலோகணக்கில் தங்கத்தை உருவாக்கி இந்தியாவின் கடனை அடைத்துவிட்டு ஆனால் மக்களின் தீயகுணங்கள் மாறாமல் அப்படியே இருந்தால் மீண்டும் இந்தியா கடனில் மூழ்கும். அதனை விட என்றுமே நிலைக்கும் நற்குணங்களை வளர்ப்பதும் அந்த ஆத்மாகள் பல பிறவிகளில் முன்னேறி நற்கதி அடையும் வழியைக் காட்டுவதற்குமே காலம் காலமாக அவதாரங்கள் வருகின்றன.
உலோகங்களின் தன்மையைப் பற்றி கூறியிருக்கிறீர்கள். அந்த உலோகங்களை படைத்த இறைவன் அதனை மீண்டும் சிறு அளவில் படைப்பது இயலாதா?
யார் என்ன சொன்னாலும் கண்மூடித்தனமாக நம்புவீரா என்றும் கேட்டிருக்கிறீர்கள். இல்லை. கட்டாயம் இல்லை. தீர விசாரித்து என் அறிவு (அது எத்தனை குறைவானதாக இருந்தாலும்) ஒத்துக் கொண்டதை மட்டுமே ஒத்துக் கொள்வேன். என் தனிப்பட்ட அனுபவங்களும் அறிவாராய்ச்சிகளும் சாயிபாபா இறைவன் என்ற முடிவைத் தந்திருக்கின்றன. அதனை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் உங்களைப் போல் சில பேர் வீடியோ படங்கள் மூலம் உண்மையை வெளியிடுவதாகச் சொல்கிறீர்கள். அவற்றின் உண்மைகள் எனக்குத் தெரியும். அதனால் நீங்கள் சொல்வதையெல்லாம் கண்மூடித்தனமாக நம்புவதில்லை.
குருகுலத்தில் பூனையைக் கட்டிவைத்தக் கதை எனக்கு மிக நன்றாகத் தெரியும். ஆனால் அதனை ஏன் இங்கே சொன்னீர்கள் என்று புரியவில்லை.
என் முன்னோர்கள் கடவுளை வழிபட்டார்கள். சாயிபாபாவை நான் எதேச்சையாக வழிபடவில்லை. நானும் என் முன்னோர்கள் போல கடவுளை வழிபட்டவன் தான். வழிபடுபவன் தான். சாயிபாபாவைப் பற்றி கேள்விபட்ட போது அவர் தலைமுடியைப் பற்றியும் அவர் 'மந்திரத்தில் மாங்காயை' வரவழைப்பதைப் பற்றியும் ஆயிரம் கேள்விகள் கேட்டும் கிண்டல் செய்தும் பேசியவன் தான். பின்னர் உள்ளே நுழைந்து அதனால் பெற்ற அனுபவங்களாலும் ஆராய்ச்சிகளாலுமே இன்று அவரை வணங்குகிறேன். எனக்கு நல்லது நடந்ததெல்லாம் சாயிபாபாவை வணங்காவிட்டாலும் நடந்திருக்கும் என்பது நன்கு எனக்குத் தெரியும். அவரை வணங்குவது இறைவனை வணங்குவது இறைவனால் படைக்கப்பட்ட எனது கடமைகளில் ஒன்று என்பதாலேயே. அவரால் எனக்கு நன்மை விளைந்தது என்பதால் அன்று. என்னைப் பற்றி தெரியாமலேயே எப்படி எனக்கு நடந்த நன்மைகள் எல்லாம் காக்கை உட்கார பனம்பழம் என்று தெரிந்தது உங்களுக்கு? ஞான திருஷ்டி உண்டோ உங்களுக்கு?
Sairam
சாய்ராம் எஸ்கே.
சிநேகிதன். உங்களின் இதே பின்னூட்டத்தை இன்னும் பல இடங்களில் பார்த்தேன். அவற்றிற்கு தகுந்த பதில்களும் வழங்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். அதனால் நானும் மீண்டும் பதில் சொல்லும் தேவையில்லை.
Post a Comment